லாஸ் ஏஞ்சலிஸ்: நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தங்கியிருந்த தற்காலிகத் தங்குமிடத்திலிருந்து ஒரு வயது முதல் பதினைந்து வயது வரையிலான 11 பிள்ளைகள் மீட்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். சிறுவர்கள் தங்கியிருந்த இடம் மிகவும் மிகவும் மோசமாகவும் அசுத்தமாகவும் இருந்ததாக ஓர் அதிகாரி கூறினார். அவ்விடத்தில் தங்கியிருந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பல வகையான துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. ஏற்கெனவே சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று வயதுக் குழந்தை கடத்தப்பட்டதன் தொடர்பில் தேடப்பட்டு வந்த 39 வயது சிராஜ் வாஹாஜ் என்பவர் கைது செய்யப்பட்ட இருவரில் அடங்குவார். குழந்தைக் கடத்தல் தொடர்பாக வாஹாஜ் கைது செய்யப்பட்டிருப்பதோடு அவருடன் இருந்த லுக்கஸ் மோர்டென் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.