ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகள்

வா‌ஷிங்டன்: ஈரான் நாட்டுடன் உலக நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து விலக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தீர்மானித்ததைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ஈரான் மீதான புதிய தடைகளை அமெரிக்கா நடப்புக்கு கொண்டுவரும் என்று தெரிவித் துள்ளார். புதிய தடைகள் மூலம் ஈரானை நெருக்குவதால் அந்நாடு அதன் அணுவாயுத நடவடிக்கை களை நிறுத்த வழிவகுக்கும் என்றும் திரு போம்பியோ கூறினார்.

ஈரானுக்கு எதிரான புதிய தடைகள் இன்று முதல் நடப்புக்கு வரும் என்று தெரிகிறது. புதிய தடைகளை செயல்படுத்து வதற்கான விவரங்களை வெள்ளை மாளிகை அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ முன்னதாகக் கூறினார். ஆசிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு வா‌ஷிங்டன் திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு போம்பியோ இதுபற்றிக் கூறினார். ஈரான் மேற்கொண்டு வரும் சட்டவிரோத நடவடிக்கை களுக்கு எதிராக ஈரான் மீது தடைகள் விதிப்பது அவசியம் என்றும் அவர் சொன்னார். இந்த வாரத்திலிருந்து ஈரானின் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் சம்பந்தப்பட்ட வர்த்தகத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் நடப்புக்கு வருகின்றன. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!