'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற வித்தியாசமான தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி வருகிறது. மணிரத்னம், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவியா ளராகப் பணியாற்றிய சர்ஜுன் இப் படத்தை இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'மா', 'லஷ்மி' ஆகிய குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். அவை இரண் டுமே தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த படைப்புகள்.
"இது ஒரு குற்றச்செயலை மைய மாக வைத்து உருவாகியுள்ள திகில் படம். படத்தின் தலைப்பே இது திகில் படம் என்பதை உணர்த்திவிடும். "சத்யராஜ் சார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள் ளார். அவரது நடிப்பு இப்படத்துக்குப் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வரலட்சுமி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர். "கடத்தல் சம்பவங்கள் குறித்து படத்தில் விரிவாகச் சொல்லியிருக்கி றோம். புதுவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய காட்சிகள் படமாகி உள்ளன," என்கி றார் சர்ஜுன்.
கதைப்படி வரலட்சுமியைக் கடத்தி விடுவாராம் கிஷோர். இதையடுத்து அவரை மீட்பதற்காகப் போராடுகிறார் சத்யராஜ். இருவருக்கும் இடையே நிலவும் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்பதை சுவாரசியமாகத் திரையில் விவரித்துள்ளாராம் சர்ஜுன். இப்படத்தை டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொ டெக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அண்மையில் படத்தைத் திரையில் கண்ட விநியோகஸ்தர் சத்தியமூர்த்தி படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி யதுடன் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். எதிர்வரும் 24ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இணையம் வழி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மிகுந்த திறமைசாலியான சர்ஜுன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் வரலட்சுமி.