You are here

நாயைக் காப்பாற்ற எழுபது அடி கிணற்றில் விழுந்த இளையர் மீட்பு

திருப்பரங்குன்றம்: எழுபது அடி கிணற்றில் தவறி விழுந்த நாயைக் காப்பாற்ற சென்றவரும் அதற்குள் தவறி விழுந்தார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள தேவி நகரில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து விடாமல் கத்திக்கொண்டிருந்த நாயைக் காப்பாற்ற அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கிணற்றின் அருகே சென்றபோது அவரும் அதற்குள் தவறி விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவர் தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பிக் கதறியழுதார். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பாலமுருகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.