இங்கு சிகிச்சை பெற்ற மலேசிய அமைச்சர் வீடு திரும்பினார்

சிங்கப்பூரின் மவுண்ட் எலி சபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலே சிய உள்துறை அமைச்சர் முஹைதின் யாசின், 71, நேற்று வீடு திரும்பினார். இரு வாரங்கள் அவர் இங்கு தங்கி சிகிச்சை பெற்ற போது மலேசியப் பிரதமர் மகாதீர் முஹம்மது, துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உள்ளிட்ட பல மலேசிய அமைச்சர்கள் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். சிங்கப்பூர் பிர தமர் லீ சியன் லூங்கும் திரு முஹைதினை சந்தித் தார். தமது கணையத்தில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற் றுவதற்காக திரு முஹைதின் சிங்கப்பூர் வந்தார். கடந்த மாத தொடக்கத் தில் அவருக்கு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. வீடு திரும்பி உள்ள திரு முஹைதின் தற்போது தமது குடும்பத்தாருடன் நேரத்தைக் கழிப்பதாக மலே சிய உள்துறை அமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித் தது. அவரது பத்திரிகைச் செயலாளர் ஹஃபிஸ் அப் துல் ஹாலிம் விடுத்துள்ள அறிக்கையில், "மவுண்ட் எலி சபெத் மருத்துவமனையின் எல்லா மருத்துவர்கள், தாதி யர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி," என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!