கனரக வாகன உரிமையாளர்கள் பொறுப்புடன் நடக்க வலியுறுத்து

சரியாகப் பராமரிக்கப்படாத கன ரக வாகனங்களால் விபத்து ஏற் டுபவதைத் தவிர்க்க அதன் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஒத்திவைப்புத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய புக்கிட் பாத்தோக் தொகுதி உறுப்பினர் முரளிபிள்ளை இதனை வலியுறுத் தினார். கடந்த மார்ச் மாதம் இழுவை லாரி ஒன்றிலிருந்து கழன்று ஓடிய சக்கரம் மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதியதில் அவர் மாண்டார். அதேபோல கடந்த மாதம் தனியார் பேருந்தின் நிறுத்துவிசை பழுதானதால் சைக்கிளோட்டிமீது அப்பேருந்து மோதியதில் அவர் மாண்டார். இவ்விரு சம்பவங்களையும் சுட்டிக்காட்டிப் பேசிய திரு முரளி பிள்ளை இந்த விவகாரத்துக்கான சட்டப் பிரிவுகளில் குறைபாடு இருப்பதாகச் சொன்னார். மேலும், வாகனப் பாகங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியவர்கள் தங்கள் குற்றங் களுக்குப் பொறுப்பேற்பதிலிருந்து தப்பிவிடுவது தமக்கு அதிருப் தியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!