தன் வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 5.2 மில்லியன் வெள்ளியைக் கையாடிய 46 வயது ஜேக்கஸ் சாய் மெங் கியோங், நேற்று ஏழு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். தற்கொலை முயற்சிக்காகவும் சட்டவிரோத நம்பிக்கை மோசடிக் காகவும் விசாரணையில் இருந்த போது, இவர் தன் நண்பரின் தென் கொரிய கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து வெளியேறவும் முயன்றதாக அறியப்படுகிறது. வேறொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்திய குற்றத்தையும் மேலும் நான்கு நம்பிக்கை மோசடிக் குற்றங்களையும் சாய் ஒப்புக் கொண்டார்.
மேலும் 22 மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. வெளிநாட்டு நாணயப் பரி மாற்றச் சேவைகளை வழங்கி வந்த 'ரி சுவீஸ்' நிதிச் சேவைகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் சாய் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் வங்கிக் கணக் கிற்கு வாடிக்கையாளர்கள் பண மாற்றம் செய்வது நிறுவனத்தின் சேவைகளில் அடங்கும். பின்னர், நிறுவனத்தின் பிரதிநிதியான சாய் 'ஓசிபிசி' வங்கியை அணுகி மாற்றப்பட்ட பணத்தை வாடிக்கை யாளர் கேட்டுக்கொண்ட நாட்டின் நாணயத்துக்கு ஏற்ப மாற்றும் முகவராகச் செயல்பட்டார்.
மாற்றப்பட்ட பணத்தைப் பின்னர் சாய் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் ஒப்படைப்பார். 2012ல் சாய் ஒரே உரிமையாள ராக 'ரி சுவீஸ் கேப்பிட்டல்' நிறு வனத்தை நிறுவினார். வாடிக்கை யாளர்கள் சார்பாக இந்நிறுவனம் முதலீடுகளைக் கவனித்து வந் தது. இருப்பினும் ஈராண்டுக்குப் பின் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.