'கெட் ஆக்டிவ்! சிங்கப்பூர்' என் னும் வருடாந்திர தேசிய விளை யாட்டு வாரத்தில் இவ்வாண்டு பங்கேற்றோர் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. தேசிய தினத்தை யொட்டி நடத்தப்படும் இந்நிகழ் வில் கடந்த 11 நாட்களாக கிட்டத் தட்ட 800,000 பேர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இந்த எண் ணிக்கை 680,000 ஆக இருந்தது. தேசிய விளையாட்டு வாரம் என் னும் இந்தத் துடிப்பான நிகழ்வு கடந்த 2016ஆம் ஆண்டு அறி முகம் கண்டது. மூன்றாவது ஆண்டாக இப் போது நடைபெற்ற விளையாட்டு வாரத்தில் சுமார் 300 நடவடிக் கைகளும் 12 விளையாட்டு விழாக் களும் இடம்பெற்றன. வழக்கமாக நடத்தப்படும் விளை யாட்டுகளோடு தலையணைப் போர் போன்ற வித் தியாசமான விளையாட்டுகளும் இவ்வாண்டு இடம்பெற்றிருந்தன.
தேசிய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் இறுதி அங்கத்தில் சுமார் 3,000 பாலர் பள்ளி மாணவர்கள் பங் கேற்று பல்வேறு விளையாட்டு களை விளையாடி மகிழ்ந்தனர். எளிய தடை முறியடிப்புப் பயிற் சிகளையும் குழந்தைகளுக்கான யோகாசனப் பயிற்சிகளையும் அவர்கள் செய்தனர். கலாசார, சமூக, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.