You are here

கலைஞர் கருணாநிதி காலமானார்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தின் முதல்வ ராக ஐந்து முறை பதவி வகித்த வருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி இந்திய நேரப்படி நேற்று மாலை 6.10 மணிக்குக் காலமானார். அவருக்கு வயது 94. வயது முதிர்வு காரணமாக அண்மைக் காலமாக அவர் உடல்நலம் குன்றியிருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளை யிடப்பட்டு ‘டிரக்- யாஸ்டமி’ எனும் கருவி பொருத்தப்பட்டது. கடந்த மாதம் 18ஆம் தேதி கருணாநிதிக்கு ஆழ்வார்பேட்டை- யில் உள்ள காவேரி மருத்துவ மனை யில் ‘டிரக்யாஸ்டமி’ குழாய் கருவியை மாற்றிவிட்டுப் புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றே அவர் வீடு திரும்பினார். ஏறத்தாழ ஒரு வாரம் இயல்பு நிலையில் இருந்த கருணாநிதிக் குக் கடந்த மாதம் 26ஆம் தேதி திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டது.

காவேரி மருத்துவமனை மருத்து- வக் குழு அவரது கோபாலபுர வீட்டுக்குச் சென்று இரண்டு நாட் களுக்குச் சிகிச்சை அளித் தது. ஆனால் கருணா நிதி யின் உடல்நலம் தொடர்ந்து மோச மடைந்தது. இந்நிலையில், கருணா நிதிக்குச் சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அன்றிரவு அவர் மூச்சுவிட முடியாமல் திணறியதால் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். குறைவாக இருந்த அவ ரது ரத்த அழுத்தம் சீராக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, வழங்- கப்பட்ட தீவிர சிகிச்சை காரண மாக கருணாநிதி உடல் நிலை- யில் முன்னேற்றம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு உட்கார வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. இந்தச் செய்தி வெளியானதும் தமது வாழ்நாளில் பல சவால்களை முறியடித்த கருணா நிதி தற்போது அவரை வாட்டும் உடல்நலப் பிரிச்சினை- யில் இருந்தும் மீண்டு வந்து விடுவார் என்று அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்- சாகம் பிறந்தது. அவர் மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர் களிடம் மிகுந்த நம்பிக்கையுடன் அப் போது கூறியிருந்தார். ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு கடுமையான நோய் தொற்- றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர் கள் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். நோய் எதிர்ப்பு சக்திக்கு ரத்த தட்டணுக்களின் அளவு குறை- வாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதைத் தொற்று, மஞ்சள் காமாலை, ரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக கடந்த ஞாயிற் றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கருணாநிதியின் நாடித் துடிப் பிலும் தொய்வு ஏற்பட்டது.

கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்ததால் அவரது குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காவேரி மருத்துவ மனைக்கு வந்தனர். சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவ மனையை அடைந் தார். திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள், சட்டமன்ற உறுப்பி- னர்கள் முக்கிய நிர்வாகிகள் ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியைப் பார்த் தனர். இதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து காவேரி மருத்- துவமனையின் வாசலிலும் கருணாநிதியின் கோபாலபுர வீட்டு வாசலிலும் திமுக கட்சித் தொண்டர்கள், கலைஞரின் அபிமானிகள் என ஆயிரக்கணக் கானோர் திரண்டனர். “தலைவா எழுந்து வா” என்று கண்ணீர் மல்க அவர்கள் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அறிக்கை வெளி யிடப்பட்டது. அதில், “வயது முதிர்வு காரணமாக கருணா நிதியின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவா லாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச் சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கின் றனவா என்பது 24 மணி நேரத் துக்குப் பிறகே தெரியும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருந்தது.

கருணாநிதி இல்லாத எதிர் காலத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத திமுகவினரை இந்த அறிக்கை வெகுவாக பாதித்தது. அவர்களது பார்வையும் காவேரி மருத்துவமனையை நோக்கியே இருந்தது. மருத்துவமனை வாசலிலேயே பலர் இரவுப் பொழுதைக் கழித்தனர். நேற்று முன்தினம் இரவு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீடு களுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை மீண்டும் மருத்துவ மனைக்குச் சென்றனர். நேற்று கருணாநிதிக்கு 11வது நாளாக மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்தது. ஆனால் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக கருணாநிதி உடலில் செலுத்தப்பட்ட மருந்துகள் கை கொடுக்கவில்லை என்று தகவல் வெளியானது.

அவரது உடலில் ரத்தத் தட்ட- ணுக்களின் அளவு குறைவாக இருந்ததால் அவரது உடலுக்குள் செலுத்தப்பட்ட மருந்துகளெல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யவில்லை என்று மருத்து வர்கள் கூறினர். இதன் காரண மாக கருணாநிதியின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமானது. படிப் படியாக மோசமடைந்த அவரது உடல்நிலையைத் தேற்ற காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும் பயன் இல்லாமல் போனது.