You are here

இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ் நீக்கம்

லண்டன்: இந்தியாவுக்கு எதிராக வருகிற 9ஆம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டிக்­கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் பந்தடிப்பதில் கோட்டைவிட்ட டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் இளையரைத் தாக்கிய வழக்கு விசாரணையை ஆல்=ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்குப் பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் 20 வயதான ஆலி போப் மற்றும் ஆல்=ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ர‌ஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர் ஆகிய வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.