You are here

தேசிய தினப் பற்றுறுதிச் சடங்குகளில் நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர் முழுதும் பொதுத்துறை ஊழியர்கள் நேற்று ஒன்றுசேர்ந்து, நாட்டின் சுதந்திரத்தை நினைவு கூரும் வகையில் தேசிய பற்றுறு தியை எடுத்துக்கொண்டனர். அதிபர் ஹலிமா யாக்கோப், நேற்றுக் காலை இஸ்தானாவின் பிரதான கட்டடத்தின் முன்நின்று பற்றுறுதிச் சடங்கில் பங்கேற்றார். திருவாட்டி ஹலிமா, அதிபராக இந்தச் சடங்கில் பங்கேற்பது இதுவே முதன்முறை. பிரதமர் லீ சியன் லூங், ஓய்வு பெற்ற கெளரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், இஸ்தானாவின் 400 பணியாளர்கள், பிரதமர் அலு வலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தேசிய பூங்காக் கழக அதிகாரிகள், ராணுவ போலிஸ் படையினர் உள் ளிட்டோர் இந்தச் சடங்கில் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் சிங்கப்பூரர் களுக்கான தமது முதலாவது தேசிய தினச் செய்தியை வெளி யிட்ட அதிபர் ஹலிமா, நமது நாட் டின் சுதந்திரத்தை ஒன்றுசேர்ந்து கொண்டாட தேசின தினம் நமக்கு அற்புத வாய்ப்பளிக்கிறது,” என் றார். அதிபர் என்ற முறையில் இன் றைய தேசிய தின அணிவகுப்பில் திருவாட்டி ஹலிமா முதல் முறை யாகக் கலந்துகொள்வார். இதற்கிடையே, தற்காப்பு அமைச்சு தலைமையகத்தில் நடை பெற்ற தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படைகள் ஆகிய வற்றைச் சேர்ந்த 2,500 பேருடன் தேசிய கீதத்தைப் பாடியதுடன் நாட்டுப் பற்றுறுதியையும் எடுத்துக் கொண்டார்.