You are here

இரு அணிகளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம்

பர்மிங்ஹாம்: லார்ட்ஸ் மைதானத் தில் இன்று தொடங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கி லாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது என இங்கிலாந்து வீரர் மோர்கன் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச் சாளரான அஸ்வின் 7 விக்கெட்டு கள் வீழ்த்தி முத்திரை பதித்தும் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. தவானின் மோசமான பந்தடிப்பு, பாண்டியாவை அணியில் சேர்த்தது என இத்தோல்விக்கு பல விமர் சனங்கள் எழுந்துள்ள °நிலையில், 2வது போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

2014ஆம் ஆண்டு டோனி தலைமையில் இந்தியா இங்கி லாந்தில் விளையாடும்போது லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன் கபில் தேவ் தலைமையில் 1986ஆம் ஆண்டும் இந்தியா வென்றது. இதனால் லார்ட்ஸில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படும்.