இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விருதுகள் பட்டியலில் முதல் இடத் தைப் பெறுகிறார் முன்னாள் அதி பர் டோனி டான் கெங் யாம். நாட்டின் ஆக உயரிய விரு தான 'தி ஆர்டர் தெமாசெக் (முதல் வகுப்பு)' விருதை அரசாங் கம் அவருக்கு வழங்கியுள்ளது. 1940ஆம் ஆண்டில் பிறந்த டாக்டர் டான், 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கப்பூரின் ஏழா வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். முன்னதாக, 1979ஆம் ஆண் டில் மக்கள் செயல் கட்சி சார்பில் அரசியலில் அடி எடுத்து வைத்த டாக்டர் டான், பொதுத் தேர்தலில் வென்று செம்பவாங் தனித் தொகு தியின் நாடாளுமன்ற உறுப்பினரா னார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெறுவ தற்கு முன் டாக்டர் டான், அர சாங்கத்தில் நிதி, தற்காப்பு, கல்வி ஆகியவற்றின் அமைச்சராகவும் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பின்னர் 1995 முதல் 2005ஆம் ஆண்டு வரை துணைப் பிரதமராக வும் பணியாற்றினார். 2005 முதல் 2011ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநராகவும் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவராகவும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.