சிங்கப்பூரை புதிய சிந்தனையோடு மறுஉருவாக்கம் செய்ய உதவும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு ஆகியவற்றை மாற்றியமைப்பதில் அரசாங்கம் என்ன செய்து வருகிறது என்பதற்கு கம்போங் அட்மிரல்டியின் ஓய்வுபெற்ற சமூகக் குடியிருப்பை தமது தேசிய தினச் செய்தியில் எடுத்துக் காட்டாக பிரதமர் கூறினார். வீடமைப்பு, கல்வி, சுகாதாரப் பரா மரிப்பு ஆகியவை தொடர்பான செலவு குறித்தே சிங்கப்பூரர்கள் அதிகம் கவலைப்படுகின்றனர் என்று கம்போங் அட்மிரல்டியின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்த தேசிய தினச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
"இவை சிங்கப்பூரில் அனைவருக்கும் தரமாகவும் கட்டுப்படியாகவும் இருப்பதை உறுதி செய்கிறோம். இந்த வகையில் குடும்பங்கள், வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவுகிறோம்; தேவையுள்ளோ ருக்குக் கூடுதல் உதவி வழங்குகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அணுகுமுறை சிறப்பாகச் செயல்பட்டுள் ளது," என்றார் திரு லீ.
"சிங்கப்பூரைக் கட்டியெழுப்பும் பணி இன்னும் நிறைவடையவில்லை. துணிச்ச லான, புத்தாக்கமான திட்டமிடல் மூலம் சிங்கப்பூரை புதிய சிந்தனையோடு மறு உருவாக்கம் செய்யலாம், குடியிருப்புப் பேட்டைகளை மறுஉருவாக்கம் செய்து, சமூகங்களுக்குப் புத்துயிரூட்டலாம்," என்றார். கம்போங் அட்மிரல்டி உட்லண்ட் சில் உள்ளது. இது சிங்கப்பூரின் முதல் ஓய்வுபெற்ற சமூகக் குடியிருப்பு. கடந்த ஆகஸ்டில் இங்கு மக்கள் குடியேறத்தொடங்கினர். இந்த 11 மாடிக் கட்டடம், மூத்த குடிமக்களுக்கான பொது வீடமைப்புடன் சுகாதார பராமரிப்பு, உடற்பயிற்சி வசதிகள், முதியோர் பராமரிப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.