குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ள நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத் துள்ளார். கோலாலம்பூரில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் திரு நஜிப் மீது கள்ளப்பணம் பரிமாற்றம் தொடர் பில் நேற்று மூன்று குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டன. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப் பட்ட காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கிடைத்த மொத்தம் 42 மில்லியன் ரிங்கிட் (S$14.1 மில்லியன்) தொகையை திரு நஜிப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இணையம் வழி மூன்று வெவ்வேறு பண பரிவர்த்தனைகள் மூலம் இந்தத் தொகை திரு நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குகளில் சேர்க்கப் பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சம் 15 ஆண்டு வரையிலான சிறையும் பெறப்பட்ட கள்ளப்பணத்தைக் காட்டிலும் 5 மடங்கு அபராதமும் விதிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் திரு நஜிப் தோல்வி அடைந்த பிறகு நீதிமன்றத்திற்கு அவர் இரண் டாவது முறையாக வந்திருந்தார்.

1எம்டிபி நிறுவன நிதி முறைகேடு தொடர்பில் கடந்த ஜூலை 4ஆம் தேதி திரு நஜிப் மீது மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு களும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச் சாட்டும் சுமத்தப்பட்டன. அந்த நான்கு குற்றச்சாட்டு களையும் திரு நஜிப் மறுத்துள்ளார். திரு நஜிப் மீது சாட்டப்பட்டுள்ள எல்லா குற்றச்சாட்டுகளும் ஒரே நீதிபதியின் கீழ் ஒன்றாக விசாரிக் கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!