செல்சியில் கிபா; ஆக அதிக விலை கோல் காப்பாளர்

லண்டன்: பிரிமியர் லீக் மற்றும் இங்கிலிஷ் காற்பந்துக் குழு வீரர்கள் குழு மாறுவதற்கான காலக்கெடு இவ்வாண்டு மூன்று வாரம் முன்னதாகவே முடிகிறது. அதன்படி இந்த காலக்கெடு சிங்கப்பூர் நேரப்படி இன்று நள் ளிரவோடு முடிகிறது. எனவே பல குழுக்களும் கடைசி நேர மாற் றத்தில் ஈடுபட்டு உள்ளன. அதன் °பிறகு சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை முதல் பிரிமியர் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. பிரிமியர் லீக் பட்டம் வெல்ல கடும் போட்டியில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியும் லிவர்பூலும் விளையாட்டாளர் களை வாங்க அதிக தொகை செலவிட்டு உள்ளது.

இந்நிலையில், ஸ்பானிய கோல்காப்பாளர் கிபாவை வாங்கும் பேச்சுவார்த்தை யில் செல்சி முன்னேற்றம் கண் டுள்ளது. 71 மில்லியன் பவுண் டுக்கு செல்சி அவரை வாங்கும் பட்சத்தில் ஆக அதிக விலை யுடைய கோல்காப்பாளர் ஆவார் கிபா அரிஷா பலாகா. கடந்த ஜூலை மாதம் கோல் காப்பாளர் அலிசானை லிவர்பூல் 66.8 மில் லியன் பவுண்டுக்கு வாங்கியதே தற்போதுவரை ஆக அதிக விலையாக உள்ளது.

மேலும் செல்சியின் ஆக அதிக விலை மதிப்புடைய வீரராகவும் கிபா இருப்பார். இதற்கிடையே செல்சி யின் பெல்ஜியம் வீரர் குரோடோ யிஸ் ரியால் மட்ரிட் குழுவிற்குச் செல்லக்கூடும் என்பதால் அவ ருக்குப் பதிலாக கிபாவை செல்சி வாங்குவதாகத் தெரிகிறது. அட்லெட்டிகோ பில்பாவ் குழுவிற்காக கடந்த இரண்டு பருவங்களாக ஸ்பானிய லா லீகா தொடரில் 53 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கிபா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!