You are here

கருணாநிதிக்கு லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

சென்னை: மறைந்த திமுக தலை வர் கருணாநிதியின் இறுதி ஊர் வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத் தினர். இதனால் ஒட்டுமொத்த சென்னையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் கருணாநிதியின் புகழுடலைச் சுமந்து சென்றது. இதையடுத்து வழி நெடுகிலும் காத்திருந்த திமுக தொண்டர்களும் பொது மக்களும் அந்த வாகனத் தின் மீது மலர்களைத் தூவி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை சுமார் 4 மணி யளவில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கருணா நிதியின் உடல் ராணுவ வாகனத் தில் ஏற்றப்பட்ட போது அவரது குடும்பத்தார், உறவினர்கள் கண் ணீர் விட்டுக் கதறி அழுதனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை தூக்கப்பட்ட போது ராஜாஜி அரங்கில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெரிதாக முழக்கங் கள் எழுப்பினர்.

மு.க.ஸ்டாலின், அழகிரி, கனி மொழி ஆகியோரும் கண்கலங்க காட்சி அளித்தது பார்ப்பவர் மனதைக் கனத்துப் போகச் செய் தது. முன்னதாக கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரைப் பகுதியில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் கிடைக்கப் பெற்றதும், மு.க.ஸ்டா லின் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். பின்னர் கூடியிருந்த தொண்டர்களை நோக்கி அவர் கரம் குவித்து நன்றி தெரிவித்தார். இதையடுத்து, “அப்பா அப்பா” என்று கதறிய அவர், தன் அருகே இருந்த திமுக முதன்மைச் செயலர் துரைமுருகனின் தோளில் சாய்ந்து விம்மினார். இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின் தொண்டர்களுடன் நடந்தே சென் றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.