You are here

முண்டியடித்த தொண்டர்கள்: நெரிசலில் சிக்கி இருவர் பலியானதாக தகவல்

சென்னை: மறைந்த திமுக தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக் கானோர் குவிந்ததால் ராஜாஜி அரங்கில் கடும் நெரிசல் ஏற்பட் டது. இதில் சிக்கி இருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரி விக்கின்றன. மறைந்த தலைவரை கடைசி யாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற தவிப்பில் திமுக தொண்டர்கள் முண்டி அடித்தனர். இதனால் கூட் டத்தைக் கட்டுப்படுத்த போலிசார் திணறினர். பலமுறை அறிவு றுத்தியும் தொண்டர்கள் கட்டுப் படாததால் போலிசார் லேசான தடியடி நடத்த வேண்டியிருந்தது.