‘யுனைடெட் வெல்வது சிரமம்’

ஹாங்காங்: இந்தப் பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான்செஸ்டர் யுனைடெட் வெல்வது சிரமம் இன்று அக்குழுவின் முன்னாள் நட்சத்திர வீரர் பால் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். யுனைடெட் ஆட்டக்காரர்கள் உற்சாகம் இன்றி காணப்படுவதாக அவர் கூறினார். வெற்றியைச் சுவைக்க வேண்டுமாயின் யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷோல்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மொரின்யோ கையாளும் உத்திகளை ஷோல்ஸ் குறைகூறினார். "தற்போதைய யுனைடெட் குழுவில் இருந்தால் நானும் மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டேன்," என்று ஷோல்ஸ் பட்டென்று ஒரு போடு போட்டார்.

இந்தக் கருத்துகள் அவருக்கும் மொரின்யோவுக்கும் இடையே வார்த்தைப் போரை மீண்டும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலாவின் உத்திகளுடன் மொரின்யோவின் உத்திகளை ஷோல்ஸ் ஒப்பிட்டார். தாக்குதலில் வெளுத்துக் கட்டும் சிட்டிக்கும் யுனைடெட்டுக்கும் உள்ள தர இடைவெளியை ஷோல்ஸ் சுட்டிக் காட்டினார்.

கடந்த பருவத்தில் பிரிமியர் லீக் பட்டத்தைச் சிட்டி வென்றது. யுனை டெட்டுக்கும் சிட்டிக்கும் இடையே 19 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது. இந்நிலையில், போதிய அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்படவில்லை என்று மொரின்யோ அதிருப்தி தெரிவித்தார். புதிய பருவத்தை யுனைடெட் சிங்கப்பூர் நேரப்படி வரும் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு லெஸ்டர் சிட்டிக்கு எதிராக தொடங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!