ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேரன்பு' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தாம் சொல்ல நினைக்கும் கருத் துக்களை ஆணித்தரமாகத் திரையில் வெளிப்படுத்துவது ராமின் வழக்கம். அந்த வகையில் 'பேரன்பு' படமும் பெரிதும் விவாதிக்கப்படும் படைப்பாக உருவாகி உள்ளதாம். இப்படத்தில் மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, 'தங்க மீன்கள்' சாதனா, திருநங்கை அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். "இப்படத்தின் நாயகன் எல்லோ ரையும் போல் சுயநலமுள்ள சாதார ணமான மனிதன். அவர் எப்படி பேரன்பு கொண்டவராக மாறுகிறார் என்பதுதான் கதை.
"இதில் அஞ்சலி ஏற்றுள்ள கதா பாத்திரம் மிகவும் புதிரானது. மற்ற கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளனர்," என்கிறார் இயக்குநர் ராம். இப்படத்துக்காக ஏரிக்கரையோரம் அமைந்துள்ள வீடு போன்ற அழகான அரங்கு ஒன்றைப் பெரும் பொருட் செலவில் அமைத்துள்ளனர். பல முக்கியமான காட்சிகளை அங்குதான் படமாக்கினாராம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, பி.எல். தேனப்பன் இப்படத்தைத் தயா ரித்துள்ளார். தமிழகத்தில் வெளியீடு காணும் முன்பே பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது 'பேரன்பு'.
தணிக்கையில் 'யுஏ' சான்றிதழ் உள்ள இப்படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் இப்படத்தைப் பார்த்த ராமின் திரையுலக நண்பர்கள் அவரை வெகுவாகப் பாராட்டி உள்ளனர். "இத்தனை ஆண்டுகாலத் திரைப் பயணத்தில் ராம் நினைத்திருந்தால் ஏராளமான படங்களை இயக்கி இருக்க முடியும். ஆனால் ரசிகர்க ளுக்கு நல்ல படங்களை மட்டுமே தர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். "ராம் மேலும் பல நல்ல படைப்புகளை தர வேண்டும் என நினைத்தால் பேரன்பு படத்தை வெற்றி பெறச் செய் வது அவசியம். ரசிகர்கள் இதை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.