சென்னை: திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின் விரை வில் பொறுப்பேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. ஸ்டாலினை உடனடியாகத் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என அவரது ஆதர வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து கட்சிப் பொதுக்குழு வின் மூலம் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை கள் துவங்கி உள்ளதாகக் கூறப் படுகிறது. திமுக பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் தேதி சென்னை யில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் அக்கட்சித் தலைவர் கருணா நிதி காலமானார்.
எனினும் முன்பே அறிவித்தபடி திமுக பொதுக்குழு கூட்டம் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. அச்சமயம் மு.க. ஸ்டாலினை முறைப்படி கட்சித் தலைவராக தேர்வு செய்தவற்கான நடவடிக்கை களை திமுக முதன்மைச் செயல ரான துரைமுருகன் மேற்கொண் டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.