எங்கும் ‘நாமே சிங்கப்பூர்’ முழக்கம்

இர்ஷாத் முஹம்மது

மரினா பே மிதக்கும் மேடையில் மிக விமரிசையாக நேற்று நடந்த சிங்கப்பூரின் 53வது தேசிய தினக் கொண்டாட்டங் களின் சிறப்பம்சங்கள் மேடையோடு நின்றுவிடவில்லை. நீர், நிலம், ஆகாயம் என அனைத்திலும் கொண்டாட்டங்கள் மேலோங்கி பார்வையாளர்களின் தேசிய உணர்வுக்கு ஊக்கமாகத் திகழ்ந்து கண்களுக்கும் விருந்தளித்தன. சிங்கப்பூரில் தேசிய தின அணிவ குப்பில் இந்த ஆண்டு முதல்முதலாக பெண் அதிபர் கலந்துகொண்ட நிகழ்வு அரங்கேறியது. சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி யேற்ற திருவாட்டி ஹலிமா யாக்கோப், நாட்டின் முதன்மைத் தலைவராகக் கலந்துகொள்ளும் முதல் தேசிய தினம் இது.

சரியாக மாலை 6.50 மணிக்கு அரங்கிற்குள் அதிபரின் கார், போக்கு வரத்து போலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் புடைசூழ வந்தவுடன் பெரும் ஆரவாரத்துடன் மக்கள் வரவேற்றனர். தற்காப்புப் படையின் புதிய தலை வராகப் பொறுப்பேற்றிருக்கும் லெஃப்டி னென்ட் ஜெனரல் மெல்வின் ஓங், பிரதமர் லீ சியன் லூங்கையும் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் தேசிய தின அணிவகுப்புக்கு வரவேற்றார். அதிபரின் வருகைக்குப் பின் பாடப் பட்ட தேசிய கீதத்தின்போது வழக்கமாக தேசிய கொடியை ஏந்திய 'சினுக்' ஹெலிகாப்டர் அரங்கைத் தாண்டிச் சென்றது.

இந்த ஆண்டு சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நேற்று மாலை தேசிய தினக் கொண் டாட்டத்தில் வானில் இதுவரை இல்லாத அளவு சாகசங்களை போர் விமானங் களும் ஹெலிகாப்டர்களும் நிகழ்த்தின. அவற்றின் சாகசங்கள் விண்ணைப் பிளந்தன.

மரினா பே மிதக்கும் மேடையில் நடந்துள்ள தேசிய தின அணிவகுப்பு வரலாற்றிலேயே ஆக அதிகமாக 26 போர் விமானங்கள் பங்குபெற்று அரங் கிலிருந்த 25,000க்கு மேற்பட்ட பார்வை யாளர்களை மட்டுமல்லாமல் மரினா பே வட்டாரத்தைச் சுற்றிலும் ஆவலுடன் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் மகிழ்வித்தன. 'நாமே சிங்கப்பூர்' எனும் கருப் பொருளைக் கொண்ட இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்கள், சிங் கப்பூரர் எனும் உணர்வையும் சிங்கப்பூர் மீதான பற்றையும் மேலோங்கச் செய்தன.

மரினா பே மிதக்கும் மேடையைச் சுற்றிலும் உள்ள கட்டடங்களில் வண்ண விளக்குகள்போல வாணவேடிக்கைகளின் ஒளிவெள்ளம் அலங்கரித்தது. இரவை வண்ணமிகு பகலாக்கியது இந்நிகழ்வு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!