இந்தியா, மியன்மார், பங்ளாதேஷ் நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக் கும் மூன்று வயது சீனச் சிறுவனுக் கும் இடையில் மலர்ந்த நட்பு சீனப் பத்திரிகையில் செய்தியாகியுள்ளது. தனது அடுக்குமாடி குடியிருப் பின் வாகனம் நிறுத்துமிடத்தில் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டி ருந்த ஊழியர்களை மூன்று வயது ஜாக் கடந்த ஆண்டு முதன் முதலாகச் சந்தித்தான். அவர்கள் பயன்படுத்தும் இயந் திரங்கள் ஜாக்கிற்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜேக் தினமும் இருமுறை கீழே சென்று அவர்கள் வேலை செய்வதைப் பார்ப்பான்.
முதலில் அவர்களுடன் சைகை மொழியில் பேசிய ஜேக், பேசப் பழகியதும் அவர்களுடன் பேசத் தொடங்கினான். சாவ் பாவ் சீன நாளிதழின் காணொளிப் பேட்டியில் "அவர்கள் எனது நல்ல நண்பர்கள்," என்று கூறியுள்ளான் ஜேக்.
"முதலில் அந்த ஊழியர்களைப் பற்றி எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. அவர்கள் முதலில் பேசத் தயங்குவார்கள். பின்னர், அவர்கள் அதிக நட்பாகவும் வெளிப் படையாகவும் பேசிப் பழகத் தொடங்கியதும் நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை," என்று ஜேக்கின் தாயார் அனி, 32, அந்நாளிதழிடம் கூறினார்.
தனது வெளிநாட்டு ஊழியர் நண்பர் களுடன் உரையாடி மகிழும் சிறுவன் ஜேக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்