பாரிஸ்: பிரான்சின் தெற்குப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 1,600 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர். பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டவர் களில் பலர், கோடைக்கால முகாம்களில் தங்கியிருந்தவர் கள் என்று கூறப்பட்டது அத்தகைய ஒரு முகாமில் சிறுவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த 70 வயது முதியவரைக் காணவில்லை என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மற்றொரு முகாமிலிருந்து 119 சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வெள்ளப்பெருக்கால் மோச மாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவ சுமார் 400 தீயணைப்பாளர்களும் போலி சாரும் தயார் நிலையில் உள் ளனர். வெள்ளப்பெருக்கில் காயம் அடைந்த பலர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள் ளனர். முன்னெச்சரிக்கை பாது காப்பு நடவடிக்கைகளை எடுக்கு மாறு குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.