ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை மீண்டும் ஒரு நிலநடுக்கம் உலுக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளதாக அதி காரிகள் கூறினர். இந்த எண் ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படு வதாகவும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். கடைசியாக வியாழக் கிழமை உலுக்கிய நிலநடுக் கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.
நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்துவிழுந்த நிலையில் குடியிருப்பாளர் ஒருவர் அவரது பொருட்களை எடுத்துச் செல்கிறார். படம்: இபிஏ