லண்டன்: கடைசி நேரத்தில் எவர்ட்டன் குழு இரண்டு பார்சிலோனா வீரர்கள் உட்பட மூவரை வாங்கியது. காற்பந்து குழுக்களுக்கான வீரர்களை வாங்குவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால் பல இங்கிலிஷ் குழுக்கள் வீரர்களை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட் டின.
ஷக்தார் டோனட்ஸ்க் வீரர் பெர்னார்டின் ஒப்பந்தம் முடிந்த தை அடுத்து, அவரை எந்தத் தொகையும் செலுத்தாமல் வாங்கி யது எவர்ட்டன். மேலும் பார்சிலோனாவின் மினாவை 30.3 மில்லியன் யூரோவுக்கும் மத்திய திடல் வீரர் கோமஸை கடனாகவும் அக்குழு வாங்கி யுள்ளது. ஏற்கெனவே வார்ட் பஃர்ட் வீரர் தங்களது குழுவில் சேர்த் துக் கொள்ள 40 மில்லியன் பவுண்டு செலவிட்டுள்ளது எவர்ட்டன்.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எந்தவொரு புதிய ஆட்டக்காரரை யும் வாங்கவில்லை. ஆஸ்டன் வில்லாவின் மத்திய திடல் வீரரை வாங்கும் அதன் முயற்சி பலனளிக்கவில்லை. ஸ்பானிய குழுக்களுக்கு இம் மாத இறுதி வரையிலும் இத்தா லிய குழுக்கள் இம்மாதம் 17ஆம் தேதி வரையிலும் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான அவகா சம் உள்ளது.