தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணனுக்கு ஜே'. ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்காகக் கஷ்டப்பட்டு மரத்தில் ஏறியுள்ளார் தினேஷ். அந்த அனுபவம் குறித்து கூறுகையில், "என்னைப் பொறுத்தவரைக்கும் நீச்சல் என்றால் தண்ணீருக்குள் கை, காலை ஆட்டுவது என்பதுதான். சின்ன வயதில் இருந்தே அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஒருமுறை கிணற்றுக்குள் விழுந்த பிறகுதான் நீச்சல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன்.
"மரம் ஏறுவதையும் அப்படித்தான் நினைத்தேன். 'பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களா?' என்று இயக்குநர் கேட்டார். ஆனால் நான் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை. நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி படப்பிடிப்பு இடத்திற்குச் சென்றேன். நான் சென்னையில் இருப்பதால் எப்போதும் செருப்பு போட்டு இருப்பேன். அங்கே வெறும் காலில் பனை மரத்தில் ஏறியபோது அதில் உள்ள செதில்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலைப் பதம் பார்க்க ஆரம்பித்தன.