இந்தியாவின் கேரள மாநிலத் தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்கூட்டியே பெய்யத் தொடங்கியது. கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழை யால் கேரளாவில் உள்ள எல்லா அணைகளும் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.
இந்நிலையில் பருவமழை மீண்டும் மிரட்டத் தொடங்கி யுள்ளது. இந்த முறை மழை சற்று உக்கிரமாகப் பெய்து வரு கிறது. கடந்த ஐம்பது ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடும் கனமழை பெய்து வரு கிறது. இதையடுத்து ஆறுக ளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்லுமாறு அறுவுறுத் தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாயப் பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.
இடுக்கி, மலப்புரம், கண் ணூர், வயநாடு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு அதிகமானதால் மாநி லத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அவை துண்டிக்கப்பட்டுள்ளன. கேரள வரலாற்றிலேயே முதல் முறையாக 22 அணைகள் மற் றும் நீர்த்தேக்கங்கள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுள்ளன.
கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் கொச்சியில் உள்ள கோயில் ஒன்றைச் சூழ்ந்து விட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவற்றில் மட்டும் 15 பேருக்கு மேல் மாண்டு விட்டனர். ஏராளமான வாகனங்களும் சேறு சகதியில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து தடைபட்டது. துண்டிக்கப் பட்ட நான்கு மாவட்ட மக் கள் தவித்து வருகின்றனர். படம்: இபிஏ