அசுர பலத்துடன் விளையாடிய பால் போக்பா

மான்செஸ்டர்: இந்தப் பருவத்துக் கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான் செஸ்டர் யுனைடெட் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை தனது சொந்த விளையாட்டரங்கமான ஓல்ட் டிராஃபர்ட்டில் லெஸ்டர் சிட்டியை அது 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடந்த பருவத்தில் லீக் பட்டியலில் யுனைடெட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தப் பருவத்தில் லீக் பட்டத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று அக்குழு வுக்கு இருக்கும் முனைப்பு நேற்றைய ஆட்டத்தில் பிரதி பலித்தது.

ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வலை நோக்கி யுனைடெட் வீரர் அனுப்பிய பந்து லெஸ்டர் சிட்டி தற்காப்பு ஆட்டக்காரரின் கையில் பட, யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார் நடுவர். பெனால்டியை அணித் தலைவர் பால் போக்பா எடுத்தார். அண்மை யில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்சுக்காக விளையாடி கிண்ணம் வென்ற போக்பா கிடைத்த வாய்ப்பை நழுவ விட வில்லை. பந்தை அவர் வலைக்குள் அனுப்ப, யுனைடெட் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத் திலேயே கோல் போட்டதால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் யுனை டெட் வீரர்களுக்குப் பிறந்தது. இந்நிலையில், மனந்தளராமல் விளையாடிய லெஸ்டர் சிட்டி கோல் போட தனக்குக் கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை நூலிழையில் தவறவிட்டது. இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் முன்னிலை வகித்தது.

லெஸ்டர் சிட்டி தற்காப்பாளர் கொடுக்கும் நெருக்குதலை முறியடித்து பந்தை வலைக்குள் அனுப்பும் மான்செஸ்டர் யுனைடெட்டின் லியூக் ஷோ (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!