குடும்பங்களுக்குச் சாதகமான வேலையிட ஏற்பாடுகளை மேலும் அதிக நிறுவனங்கள் இம்மாதம் 31ஆம் தேதியில் வழங்க உள்ளன. சிங்கப்பூரர்கள் தங்கள் குடும்பங் கள் மீது அதிக கவனத்தைச் செலுத்த ஊக்குவிக்கும் திட்டங் களில் இதுவும் இடம்பெறுகிறது.
வாழ்நாளுக்குக் குடும்பம் எனப்படும் 'ஃபேமிலிஸ் ஃபோர் லைப்' இயக்கத்தின் குடும்ப வார இறுதிக்கு கிட்டத்தட்ட 210 நிறு வனங்கள் ஆதரவு அளித்து உள் ளன. கடந்த ஆண்டின் எண்ணிக் கையைவிட இது அதிகம். திட்டத்தில் பங்குபெறும் நிறு வன ஊழியர்கள் ஒரு நாளுக்கு, குடும்ப தினம் தொடர்பான திட் டங்களில் பங்கேற்கலாம். அவர்கள் தங்கள் பிள்ளைகளை வேலையிடத் திற்கு அழைத்து வரலாம் அல்லது வேலை நேரம் முடியும் முன்னரே வீடு திரும்பலாம்.
மரினா அணைக்கட்டில் 'ஃபேமிலிஸ் ஃபோர் லைப்' நடத்திய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை பொன்விழாக் கொண்டாட்டச் சுற்றுலாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இவ்வாறு கூறினார். "குடும்ப வாழ்க்கை முக்கியம் என்பதை இந்நடவடிக்கைகள் வேலை இடத்திற்கு வலியுறுத்து கின்றன. உங்களது குடும்பம் வலுவாக இருந்தால் வேலை இடத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்படலாம்," என்றார் திரு லீ.
மரினா அணைக்கட்டில் 'ஃபேமிலிஸ் ஃபோர் லைப்' இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த சுற்றுலாவில் சிறப்பு விருந்தினர் அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்), பங்கேற்பாளர்களுடன் உரையாடுகிறார். விமான சாகசங்கள் இந்நிகழ்ச்சியில் முக்கிய அங்கம் வகித்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்