அதிகாரப்பூர்வ அறிவிப்பு: திருவாரூர் தொகுதி காலியானது

சென்னை: திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறை வையடுத்து அத்தொகுதி தற் போது காலியாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் அவர் காலமானார். இதையடுத்து கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டப் பேரவை செயலகத்துக்கு முறைப் படி தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் முறைப்படி அறிவிப் பாணை வெளியிட்டார். இந்த அறிவிப்பாணை குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக் கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் கால மாகும் பட்சத்தில் அவரது தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண் டும். அந்த வகையில், கருணாநிதி இறந்ததை அடுத்து காலியாகி உள்ள திருவாரூர் தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்துவதற்கான நட வடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் அண்மையில் காலமானார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானதாக அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இரு தொகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் இடைத்தேர்தல் நடத்தப் படலாம் என அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகின்றனர். 2018-08-12 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!