மாணவர்களுக்கான இந்திய மரபுடைமை, கலாசாரப் போட்டி

குடும்பப் பிணைப்பை வலுவாக்கி அதே நேரத்தில் இந்திய மரபு டைமையையும் கலாசாரத்தையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக் கும் விதமாக மக்கள் கழக நற்பணிப் பேரவை நடத்தும் போட்டி இன்று தொடங்குகிறது. தமிழ் முரசு, இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவற்றின் ஆதர வுடன் நடைபெறும் இந்தப் போட்டி ஒரு மாத காலம் நீடிக்கும். சிங்கப்பூரில் குடியிருக்கும் அனைத்துச் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

இப்போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி நிறைவடையும். தேர்வு செய் யப்பட்ட படைப்புகளைப் போட்டி யாளர்கள் நடுவர் குழு ஒன்றின் முன் வாய்மொழி படைப்பாகச் சமர்ப்பிக்கவேண்டும். சிறந்த 20 வெற்றியாளர்கள் பரிசுகளைத் தட்டிச் செல்வார்கள். விண்ணப்ப முறை 1. விண்ணப்பங்கள் உங்களின் சொந்த, புதிய படைப்புகளாக இருக்க வேண்டும். எற்கனவே அவை வெளியிடப்பட்டிருக்கக் கூடாது. பிறருடைய படைப்பு களைத் தழுவியோ முழுமையாக மற்றவரின் படைப்பாகவோ இருந் தால் படைப்புகள் நிராகரிக்கப்படும். 2. விண்ணப்பங்கள் ஆங்கிலத் திலோ தமிழிலோ இருக்க வேண்டும்.

3. பங்கேற்பாளர்கள் 20 வயதுக்கும் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் பள்ளி செல் லும் மாணவர்களாக இருக்க வேண்டும். அம்மாணவரின் குடும் பம் அவரின் படைப்புக்கு ஆதர வளிக்கவேண்டும்.

விண்ணப்பத்தில் முழு பெயர், அஞ்சல் முகவரி (அடையாள அட்டையில் இருப்பதுபோல்), மின் அஞ்சல் முகவரி, மற்றும் தொடர்பு எண்ணை உள்ளடக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் தான் விண்ணப்பிக்கலாம்.

4. வெற்றிபெறும் படைப்புகள், அவற்றின் எழுத்து மற்றும் வாய் மொழி படைப்புத் தரத்தின் அடிப் படைகளில் தேர்ந்தெடுக்கப்படும். 5. பதிவுசெய்யப்பட்ட படைப்பு கள், தளங்கள் உட்பட, மக்கள் கழக நற்பணிப் பேரவைக்குச் சொந்தமானதாகும். மக்கள் கழக நற்பணிப் பேரவை இப்படைப்பு களின் பதிப்புரிமைகளைச் சொந்த மாக்கிக்கொள்ளும்.

இப்படைப்புகளை ஒரு பகுதி யாகவோ முழுதாகவோ மக்கள் கழக நற்பணிப் பேரவை தேர்வு செய்யும் பொருத்தமான தளங் களில் பயன்படுத்தலாம். 6. படைப்புகளை மின்னஞ்சல் மூலம் narpaniyouthsg@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மக்கள் கழகத்தின் ஒருங் கிணைப்புப் பிரிவைச் (Integration Division) சேர்ந்த திருமதி திலகாவின் பெயரைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும்.

உங்கள் மின்னஞ்சலின் தலைப்பில் "NARPANI INDIAN HERITAGE AND CULTURE CONTEST 2018" என்று குறிப்பிடவும். வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்க ளுக்கு மூன்று நாட்களுக்குள் அங்கீகார மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள்: s 1,000 முதல் 1,500 வார்த்தை கள் வரை இருக்கலாம். sமைகிரோசாஃப்ட் வோர்ட் (.docx) அமைப்பில் இருக்க வேண்டும். s ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். s தொடர்புடைய படங்கள், JPEG அல்லது TIFF வகையில் இருக்கவேண்டும்.

அனுப்பப்படும் விண்ணப்பத் தின் மொத்த அளவு (படங்கள் உட்பட) 1MB முதல் 5MB வரை. மேல் விவரங்களுக்கு அல்லது விண்ணப்ப உதவிக்குத் திருமதி திலகா (6340 5437), திரு சிவா (6340 5094) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம் (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து).

இந்திய மரபுடைமை, கலாசாரம் ஆகியவற்றின் விழிப்புணர்வுடன் குடும்பப் பிணைப்பை வலுப் படுத்தும் இப்போட்டியில் கலந்து கொள்ள நற்பணிப் பேரவை அனைவரையும் அழைக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!