ஹன்சிகாவின் பரம ரசிகரான இளம் இயக்குநர் ஒருவர் அவருக்காகவே ஒரு கதை எழுதி வருகிறார். அந்தக் கதையில் ஹன்சிகா நடித்தால் 2019ஆம் ஆண்டின் 'சூப்பர் ஸ்டார்' ஹன்சிகாதான் என்று திண்ணமாகக் கூறுகிறார். திரையில் நாயகர்களே கோலோச்சிக் கொண்டு, நாயகிகள் மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிவிட்டது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்துக் கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
பல படங்களின் அண்மைய வெற்றி இந்த முடிவை உறுதிப்படுத்துகிறது. இளம் இயக்குநர் யு.ஆர். ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கு மட்டும் பொருந்தும் ஒரு பிரமாதமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். அதுபற்றி கூறுகையில், "இந்தக் கதையையும் திரைக்கதையையும் மெருகேற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடை பெற்றுக்கொண்டு இருந்தன. தற்பொழுது அந்தப் பணிகள் முடிவடைந்துவிட்டன.
"இந்தக் கதையின் நாயகி அழகும் அறிவும் தீரமும் இளமையும் கொண்டவள். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஹன்சிகாதான் சரியான ஆள் என்று முடிவெடுத்து அவரிடம் கூறினேன். அவரும் கதையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து உடனே நடிக்க இணங்கினார்.