‘யார் அந்த கறுப்பு ஆடு’

'ஜோடி நம்பர் 1' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா கோகோய் நாயகியாக நடிக்கும் 'யார் அந்த கறுப்பு ஆடு' படத்தில் விவன் நாயகனாக நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இவர்தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின. "இதில் வயது வந்தவர்களுக்கான நகைச்சுவை அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஆபாசம் அறவே இருக்காது. வயது வந்த இளையர்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஜாலியாக சிரித்துப் பேசும் இயல்பான உரையாடல் முறையைத்தான் இப்படத்தில் பயன்படுத்தி உள்ளோம்.

இத்தகைய படங்களை இளம் ரசிகர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'ஹர ஹர மகாதேவகி' உள்ளிட்ட படங்களின் வரிசையில் எங்கள் படைப்பும் வெற்றிபெறும். அண்மையில் வெளியான சில படங்கள் வெற்றிபெறாமல் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எங்களுடைய படம் அனைவருக்கும் லாபத்தைத் தரும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் விவன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!