‘பார்கின்சன்ஸ்’ நோய் பற்றிய விழிப்புணர்வு முக்கியம்

ஒருவருக்கு 'பார்கின்சன்ஸ்' எனப் படும் ஒருவகை நடுக்குவாத நோய் ஏற்படும்போது, அவரது மைய நரம்பு மண்டலம் நாளடைவில் சிதைந்து போவதால் அவர் அதனால் இறந்துவிடுவார் என்பது பலரது எண்ணம். ஆனால், அந்நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றல்ல. துடிப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் 'நிமோனியா' போன்ற இதர நோய்களைத் தவிர்க்க முடியும். பார்கின்சன்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், ஹுவா சோங் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 10 மாண வர்கள் நேற்று பொங்கோல் வாட்ட ர்வே பூங்காவில் நன்கொடை ஓட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

அதற்கு மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றமும் சிங்கப்பூர் பார்கின்சன்ஸ் சங்கமும் இணைந்து ஆதரவு அளித்தன. இரண்டாவது ஆண்டாக நடை பெறும் இந்த ஓட்டத்தில் 300க்கும் அதிகமானோர் கலந்துகொண் டனர். ஹுவா சோங் கல்விக் கழகத்தின் மாணவர்கள் தொடங்கிய 'புரோஜெக்ட் நோவோ' எனப் படும் ஒரு திட்டத்தின் பகுதியாக இந்த ஓட்டம் நடைபெறுகிறது.

நடுக்குவாத நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பொங்கோல் வாட்டர்வே பூங்காவில் நேற்று நடைபெற்ற நன்கொடை ஓட்ட நிகழ்ச்சியை ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி ரஹாயு மஹ்ஸாம் (மேம்பாலத்தில் முக்காடு அணிந்திருப்பவர்) பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!