பாலியல் தொழில் புரிந்த சந்தேகத்தின் பேரில் போலிஸ் 23 நாட்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 162 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 157 பெண்கள் அடங்குவர். எஞ்சிய ஐந்து ஆண்கள் 19க்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இந்த அதிரடி சோதனை கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுற்றதாக போலிஸ் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, ஆறு போலிஸ் பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுதும் உள்ள பல்வேறு இடங்களில் சோதனையை மேற் கொண்டனர்.
கேலாங், ஜாலான் சுல்தான், கேவனா ரோடு, பாலஸ் டியர் ரோடு உள்ளிட்ட இடங் களில் உள்ள கொண்டோமினிய வீடு கள், ஹோட்டல்கள், இதர குடியி ருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது மடிக் கணினிகளும் கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைப் பாலியல் நடவடிக்கை களுக்கு அனுமதிப்பது சட்டப்படி குற்றமாகும் என போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.