லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் நேற்று தொடங்கிய நிலையில் எவர்ட்டன் குழுவைச் சந்தித்த உல்வர்ஹேம் டன் ரோவர்ஸ் அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எவர்ட்டன் அணி யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது. புதிய பருவத்தில் பிரேசிலிய மத்திய திடல் வீரரான ரிச்சர்லிசன் என்பவரை எவர்ட்டன் குழு வாங் கியது. அதற்காகக் கொடுக்கப் பட்ட 50 மில்லியன் பவுண்ட்கள் பலருக்கு வியப்பை ஊட்டின. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் எவர்ட்டன் சார்பாக அவர் இரண்டு கோல்கள் போட்டது எவர்ட்டன் நிர்வாகியான மார்க்கோ சில்வா அவர் மீது வைத்த நம்பிக்கையை நிரூபணம் செய்தது.
ஆனால், எவர்ட்டனுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் விளை யாடிய உல்வ்ஸ் அணி, ஆட்டத் தின் 44, 80ஆம் நிமிடங்களில் தனது பங்குக்கு இரண்டு கோல் கள் போட்டு ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது. எவர்ட்டன் அணியின் ஃபில் ஜகியல்கா இரண்டாம் பாதி ஆட்டத்தில் உல்வ்ஸ் அணியின் டியோகோ ஜோட்டா மீது மேற் கொண்ட கடும் தாக்குதலுக்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட உல்வ்ஸ் அணி இரண்டாவது கோலைப் போட்டு எவர்ட்டனின் வெற்றியைத் தட்டிப் பறித்தது. மற்றோர் ஆட்டத்தில் ஹடர்ஸ் ஃபீல்டை எதிர்கொண்ட செல்சி அணி 3=0 என வெற்றி பெற்றது. செல்சியின் கோல்களை ஜோர் கின்யோ, பெட்ரோ, கோன்டே ஆகியோர் போட்டனர். புதிய வர வாகக் களமிறக்கப்பட்ட செல்சி கோல்காப்பாளர் கெபா, ஹடர்ஸ் ஃபீல்ட் கோல் போடக்கூடிய ஒன் றிரண்டு வாய்ப்புகளையும் தடுத்து சிறப்பாக ஆடினார்.
வேறோர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் அணி நியூகாசல் அணியை 2-1 என வீழ்த்தி வாகை சூடியது. இரு அணிகளின் மூன்று கோல்களும் ஆட்டம் தொடங்கிய இருபது நிமிடங்களிலேயே போடப் பட்டன. அதன் பிறகு கோல்களுக் காகப் போராடிய அணிகள் ஏமாற்றத்தையே சந்தித்தன.