இங்கிலாந்து=இந்தியா இடையி லான 2=வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய் யப்பட்ட நிலையில் இரண்டாம் நாளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியா மல் 107 ஓட்டங்களில் இந்தியா சுருண்டது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து மளமளவென ஓட்டங் களைக் குவித்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப் பிற்கு 357 ஓட்டங்களைக் குவித் திருந்தது. 4ஆம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாம் குர்ரான் 40 ஓட்டங்கள் எடுத் திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது இங்கிலாந்து 7 விக் கெட் இழப்பிற்கு 396 ஓட்டங்கள் குவித்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 137 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்கள் பின்தங்கிய நிலை யில் இந்தியா தனது இரண்டாது இன்னிங்சைத் தொடங்கியது. 17 ஓட்டங்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. ஒன்பது ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக் கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இன்று ஐந்தாவது நாளில் இந்தியா எஞ்சியுள்ள விக்கெட்டு களைப் பறிகொடுத்து தோல் வியைத் தழுவும் நிலையில் உள்ளது. ஒருவேளை மழை நீடித்தால் இரண்டாவது டெ-ஸ்ட்டை 'டிரா' செய்யும் வாய்ப்பு உள்ளது.