கேரளா நிலவரம் மோசம்: விடாமல் கொட்டும் மழை

இந்தியாவின் கேரள மாநிலம் ஏற்கெனவே வெள்ளத்தால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று பல பகுதிகளிலும் தொடர்ந்து பேய்மழை பெய்ததால் மீட்புப் பணிகள் பெரும் சங்கடங்களுக்கு உள்ளான தாகத் தெரிவிக்கப்பட்டது. பருவமழை காரணமாக அந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு நேற்று வரை 37 பேர் மாண்டுவிட் டனர். 60,622 பேர் 513 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 101 வீடுகள் முற்றாகச் சேதம் அடைந்துவிட்டன. 1,501 வீடுகள் இடிந்து போயிருக்கின்றன. இந்த நிலையில், சனிக்கிழமையன்று மழை சற்று தணிந்ததாகவும் அதன் காரண மாக இடுக்கி, இடமலையார் ஆகிய நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் கொஞ்சம் குறைந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது பெரும் பிரச்சினையாகிவிட் டது என்று அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் தாழ்வான பகுதிகளில் வசிப் போர் பீதி அடையவேண்டாம் என்று அரசாங் கம் அறிவித்து இருக்கிறது. சனிக்கிழமை முதல் புதிதாக உயிருடற் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று விமானம் மூலம் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டார். கொச்சியில் தளம் கொண்டிருக்கும் கேரளாவின் முதல்வர் விஜயனுடன் அவர் கலந்து விவாதித்தார். மீட்புப் பணிகளில் ராணுவமும் மெட்ராஸ் ரெஜிமண்ட் படைப் பிரிவும் கடற்படை, விமானப்படை வீரர்களும் தேசிய மீட்புப் பணி படையினரும் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் வெள்ளம், நிலச்சரிவு காரண மாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். கோழிக் கோடு, இடுக்கி, மல்லபுலம், கன்னூர், வயநாடு ஆகியவை உள்ளிட்ட படுமோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிக்கிக் கொண்டு இருப்போரை அவர்கள் காப்பாற்றி வருவதாக தற்காப்பு வட்டாரங்கள் கூறின. வெள்ளம் காரணமாக சாலைகள் அடித் துச்செல்லப்பட்டதால் மணந்தவாடி, வைத்ரி, வயநாடு மாவட்டங்கள் முற்றாகத் துண்டிக்கப் பட்டு இருக்கின்றன.

இதனிடையே, இந்தியாவில் கேரளா உட்பட 16 மாநிலங்களில் பேய்மழை பெய்யும் என்று சனிக்கிழமை தேசிய பேரிடர் நிவாரண ஆணையம் எச்சரித்து இருந்தது. வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு அறிவிப்பு விடுத் திருந்தது. ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி, பாலக் காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய எட்டு மாவட்டங்களிலும் அபாய சங்கு ஊதப்பட்டு இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து ஆட்சியர்களுக் கும் எல்லா அமைப்புகளுக்கும் முதல்வர் அவசர உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார். 24 மணிநேரமும் விழிப்புடன் இருந்து நிவா ரணப் பணிகளில் ஈடுபடுமாறு அவர் அறி வுறுத்தி இருக்கிறார். இந்நிலையில் நாளை மறுதினம் வரை கடும் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது. மாநில முதல்வர் நேற்று விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். இதுவரையில் சந்தித்திராத ஆக மோசமான பேரிடரை இப்போது கேரளா சந்தித்து வருவ தாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!