கிழக்கு இந்தோனீசியாவில் உள்ள அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலைப் பகுதியில் ஒரு விமானம் விபத்துக் குள்ளானதில் எட்டு பேர் கொல்லப் பட்டனர். 12 வயது சிறுவன் மட்டும் உயிர் பிழைத்ததாக அதி காரிகள் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்தில் செய்யப்பட்ட பிளாட்டர்ஸ் ரக விமானம் பாப்புவா என்ற தொலைதூர மாநிலத்தில் ஏறக்குறைய 40 நிமிடம் பறந்து செல்லவேண்டி இருந்தது. அப்போது அந்த விமானம், விமானப் போக்குவரத்து கட்டுப் பாட்டுத் தொடர்பை இழந்துவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒக்சிபில் என்ற துணை மாவட் டத்தில் இருக்கும் மலைப்பகுதியில் அடர்த்தியான காட்டில் விமானத் தின் பாகங்கள் நேற்று கண்டுபிடிக் கப்பட்டதாகவும் பயணிகள் எட்டு பேர் இறந்து கிடந்ததாகவும் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருந்ததாகவும் பாப்புவா மாநில ராணுவப் பேச்சாளர் கர்னல் சியாந் துரி தெரிவித்தார். விமான விபத்துக்கான கார ணம் தெரியவில்லை என்று அந்த அதிகாரி கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. தேசிய போக்குவரத்து பாதுகாப் புக் குழு விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிமோனிம் ஏர் என்ற தனியார் வாடகை நிறுவனத்துக்குச் சொந்த மான அந்த விமானம், ஏழு பயணி கள், இரண்டு ஊழியர்களுடன் பறந்துகொண்டிருந்தது. விபத்து நிகழ்ந்ததற்கு முன்ன தாக தாங்கள் பெரும் சத்தத்தைக் கேட்டதாகவும் பிறகு விமானம் வெடித்ததைப் பார்த்ததாகவும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒக்காதம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாக தெரிவித்தனர். இந்தோனீசியா, ஆயிரக்கணக் கான தீவுகளை உள்ளடக்கிய நாடாகும். அந்தத் தீவுகளை இணைக்க விமானப் போக்கு வரத்தையே அந்த நாடு பெரிதும் சார்ந்து இருக்கிறது. இருந்தாலும் விமானப் பாது காப்பில் பல குறைபாடுகள் இருக் கின்றன. அண்மைய காலங்களில் பல விமான விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன. பாப்புவா என்பது போக்குவரத்தைப் பொறுத்தவரை யில் மிகவும் சிரமமான ஓர் இடத் தில் உள்ள மாநிலமாகும்.