பாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா

ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பதுடன் அதில் ஈடுபட்டு பார்க்கவும் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்த் திருவிழா.

உமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் இம்மாதம் 4ஆம் தேதியன்று நடைபெற்ற இவ்விழாவில் தொடக் கப்பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்கெல்லாம் கிட்டத்தட்ட 1,300 மாணவர்கள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கூடத் தொடங் கினார்கள். இந்நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், கபடி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற பற்பல பாரம்பரிய நடவடிக் கைகள் வெவ்வேறு பயிற்றுவிப் பாளர்களைக் கொண்டு மாண வர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் பயின்ற புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயது சரண் சுரேஷ் குமார், "ஆரம்பத்தில் இந்நடவடிக்கையைச் செய்யத் தயக்கமாக இருந்தது. பயிற்றுவிப் பாளர் திரு கமாலுதினின் ஊக் கத்தால் இந்த ஆட்டத்தில் மெல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறேன். இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் என் பாரம்பரியத்தை அறிவதாக உணர்கிறேன்," என்றார்.

கபடி பெரும்பாலும் ஆண்களால் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டாக இருந்தபோதிலும் இந்த விளையாட்டைப் பற்றி அனைத்து தமிழ் மாணவர்களும் அறியவேண்டும் எனும் நோக்கில் பெண்கள் பிரிவில் மாணவிகளும் கபடி ஆட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதில் பங்கெடுத்த நார்த் ஸ்பிரிங் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 9 வயது மாணவி சஞ்சனா செந்தில் வேல், "இந்த விளையாட்டு மிகவும் சுவாரசியமாக உள்ளது. இதற் காகவே நான் மீண்டும் தமிழ்த் திருவிழாவுக்கு வருவேன்," என்று கூறினார். நிகழ்ச்சிக்குத் தொண்டூழியராக வந்திருந்த ஹொங்கா உயர் நிலைப்பள்ளி ஆசி ரியர் தங்கமுத்து மீனாட்சி சுந்தரி, நாட்டுப்புறப் பாடல் வகுப்பை வழிநடத்த உதவினார்.

அவர், "நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் மாண வர்கள் தமிழ்ப் பாரம் பரியத்தை அறிவதோடு புதிய சொற்களையும் மாணவர்கள் தெரிந்து கொள் கிறார்கள்," என்றார். "இந்தப் பாடல்களின் வழியாக வயல், நெல் போன்ற வார்த்தை களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். தமிழ் மொழி கற்றலை இது மாணவர்களிடையே பெரிதும் ஊக்குவித்துள்ளது," என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டு கள், பாடல்கள் மட்டுமின்றி திறந்த வெளி நாடகப் பயிற்சிகளும் இவ்வாண்டு மாணவர் தமிழ்த் திருவிழாவில் அதிக முக்கியத் துவத்தை பெற்றது. சூழ்நிலை சார்ந்த கற்றலுக்காகவும் சமூக உணர்வை மாணவர்களிடையே தூண்டுவதற்காகவும் இம்முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக இந்தியாவிலிருந்து சூழல்சார் அரங்கம், புலனாகா அரங்கம், உடல்சார் அரங்கம் ஆகிய மூன்று வகை நாடகப் பிரிவுகளின் பயிற்றுவிப்பாளர்கள் அழைத்துவரப்பட்டனர்.

'பொன்னியின் செல்வன்' என்னும் வரலாற்று நாடகத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித் துப் புகழ்பெற்ற முனைவர் மு. இராமசாமியின் இயக்கத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், 'மூன்று படித்த அறிவாளிகளும் ஒரு படிக்காத மேதையும்' என்ற நாடகத்தை தமிழ்த் திருவிழா நிகழ்ச்சி அன்று மாணவர்களிடையே அரங்கேற்றினர். உயர்நிலைப்பள்ளியின் தேசிய தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் பயிலும் இந்த மாணவர்கள் நவீன நாடக அரங்கு பாணியில் நடித்துக் காட்டினர்.

இத்திருவிழாவின் ஒருங் கிணைப்பாளரான உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மூத்த ஆசிரியர் திருமதி அமுதா மோகன், "பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைத் தமிழ் மாணவர்கள் தெரிந்துகொள்ள சிங்கப்பூரில் அதிக தளங்கள் இல்லாததால், நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சி யைத் தயாரித்துள்ளோம். இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்தது மகிழ்ச்சிக்குரியது," என்றார்.

அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற விளையாட்டுகளை அரங்க வடிவில் அமைக்கும் முயற்சி எடுக்கப்படும் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

கலைநிகழ்ச்சிகள் நாள் முழுவதும் நடைபெற்ற அதே நாளில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் 41ஆவது பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்களின் திறன்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு இயக்குநர் திருவாட்டி ஹெங் பொய் ஹொங் கலந்து கொண்டார். இந்த விருது நிகழ்ச்சியில் தத்தம் வகுப்புகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 33 உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங் கப்பட்டன. கரிஷ்மா ஹரிகிருஷ்ணனுக்கு சிறந்த புறப்பாட நடவடிக்கை விருதும் சரவணன் வர்‌ஷிணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உன்னத விருதும் வழங் கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!