You are here

உல்லாசக் கப்பலையடுத்து விமானத்தையும் கைப்பற்ற மலேசிய அரசு விரும்புகிறது

செர்டாங்: 1எம்டிபி நிதி மோசடி விவகாரம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மலேசிய வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமான தனியார் விமானத்தையும் கைப்பற்ற மலே சிய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது அந்த விமானம் சிங்கப்பூரில் இருப்பதாகத் தெரிகிறது என்று மலேசிய பிரதமர் மகாதீர் கூறினார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஜோ லோவின் உல்லாசக் கப்பலை மீட்டு கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தியுள்ள மலேசியா தற்போது அவரது விமானத் துக்கும் குறி வைத்துள்ளது.

தனியார் ஜெட் விமானம் மலேசியாவுக்குக் கொண்டு வரும் திட்டமுள்ளதா என்று பிரதமர் மகாதீரிடம் கேட்கப்பட்டதற்கு “ஆம், அப்படித்தான், நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்,” என்றார். கண்காட்சியைப் பார்த்த பிறகு நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அந்த தனியார் விமானம் 2017ல் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தாகவும் அது சிலேத்தார் விமான நிலையத் தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தோனீசியாவில் இருந்த ஜோ லோவின் 250 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள ‘இக்குவானிமிட்டி’ எனும் ஆடம்பரக் கப் பலை கடந்த வாரம் மலேசியா மீட்டது. நேற்று முன்தினம் அந்தக்கப்பலை சுற்றிப் பார்த்த டாக்டர் மகாதீர், “உல்லாசக் கப்பல்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இதுபோன்று பார்த்ததில்லை,” என்று கூறியிருந்தார். உல்லாசக் கப்பல் 1எம்டிபி நிறு வனத்திலிருந்து திருடப்பட்ட பணத்தி லிருந்து வாங்கப்பட்டது என்றும் ஜோ லோவுக்குச் சொந்தமானது என்றும் கூறப் படுகிறது.

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘பம்பார்டியர் குளோபல் 5000’ ரக விமானம். மலேசிய வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் இதே போன்ற விமானத்தைக் கைப்பற்ற மலேசிய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்