You are here

மகிமா: நான் மிகவும் நல்ல பெண்

தாம் யாரையும் தற்போது காதலிக்கவில்லை என்கிறார் இளம் நாயகி மகிமா நம்பியார். காதலிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை என்றாலும் தற்போதைக்குத் தனக்குக் காதலர் என யாரும் இல்லை என்கிறார். அடுத்து விக்ரம் பிரபுவுடன் ‘அசுரகுரு’, தினே‌ஷுடன் ‘அண்ணனுக்கு ஜே’, ஜி.வி. பிரகாசுடன் ‘ஐங்கரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மகிமா. எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வருபவருக்கு முனைவர் பட்டம் பெறுவதுதான் எதிர்கால இலக்காம். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் கல்வி அறிவு என்பது எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது என்றும் பொறுப்புடன் பேசுகிறார். “என்னைப் பொறுத்தவரையில் நான் மிகவும் நல்ல பெண். படப்பிடிப்பு முடிந்துவிட்டால் உடனே வீடு திரும்பி விடுவேன். நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பதில்தான் எனக்கு விருப்பம். இந்தக் காரணத்தால்தான் என்னைப் பற்றி எந்தக் கிசுகிசுவும் வரவில்லை,” என்கிறார் மகிமா.