காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலத்தில் உள்ள ராணுவத் தளம் மீது தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்திய தில் 35 ராணுவ வீரர்களும் போலிஸ்காரர்களும் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி நகரை கைப்பற்றும் நோக்கத்துடன் தலிபான் போராளிகள் சென்ற வாரம் அந்நகரை சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினர். இந்நிலையில் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் பாகியான் மாநிலத்தில் உள்ள ராணுவத் தளத்தின்மீது செவ்வாய்க்கிழமை இரவு போராளிகள் தாக்குதல் நடத்தியதாக மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ராணுவத் தளத்தை கடுமையாகத் தாக்கிய போராளிகள் பின்னர் ராணுவச் சாவடி மற்றும் போலிஸ் சோதனைச் சாவடிகளுக்கு தீ வைத்ததாகவும் கூறப்பட்டது. அத்தாக்குதலில் குறைந்தது 35 ராணுவ வீரர்களும் 9 போலிஸ்காரர்களும் கொல்லப் பட்டதாக உள்துறை அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் கூறினார். அந்தத் தாக்குதல்களுக்கு தாங்களே காரணம் என்று தலிபான் போராளிகள் குழுவின் தலைவர் முஜாஹிட் கூறியுள்ளார். காஸ்னி நகரில் சென்ற வாரம் தலிபான் போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் பொதுமக்களில் பலர் கொல் லப்பட்டனர். இன்னும் பலர் காயம் அடைந்தனர். காஸ்னி நகரை தலிபான் போராளிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி யதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்நகரம் போராளிகள் வசம் சிக்காமல் இருப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கடுமை யாக சண்டையிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் போராளிகளை எதிர்த்து பாதுகாப்புப் படை யினர் சண்டையிட்டபோதிலும் அண்மைய நாட்களாக போராளி களை விரட்ட ராணுவ வீரர்கள் சிரமப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.