இத்தாலியில் தீவிர மீட்புப் பணிகள்

ரோம்: இத்தாலியின் ஜெனோவா நகரில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்ககை 37 ஆக உயர்ந்துள்ள நிலையில் அவ்விடத்தில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்திற்கு அடியில் பல வாகனங்கள் சிக்கியுள்ளன. பாலம் இடிந்துவிழுந்த போது அந்த நெடுஞ்சாலையில் 32 கார்களும் மூன்று கனரக வாகனங் களும் சென்று கொண்டிருந்ததாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருக் கக்கூடும் என்று மீட்புக் குழுவினர் நம்புகின்றனர். சுமார் 250 தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 16 பேர் காயம் அடைந்ததாகவும் இன்னும் 12 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

"நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை. பாலத்திற்கு அடி யில் சிக்கியுள்ளவர்களில் கடைசி நபரைக் காப்பாற்றும் வரை இரவு, பகல் என்று பார்க்காமல் தொடர்ந்து தேடுவோம்," என்று தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அந்தப் பாலத்தின் மற்ற பகுதிகள் இடிந்துவிழக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு சுமார் 400 பேர் அவ்விடத்தைவிட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். அந்தப் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரிய வில்லை. விபத்தில் உயிர் தப்பிய வர்களில் ஒருவர் முன்னாள் கோல் காப்பாளரான டேவிட் கெப்பல்லோ ஆவார். பாலம் இடிந்து விழுந்தபோது காரோடு சேர்ந்து 50 மீட்டர் உயரத் திலிருந்து விழுந்தவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

பாலத்திற்கு அடியில் சிக்கி காயம் அடைந்த ஒருவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வெளியில் கொண்டு வருகின்றனர். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!