சென்னை: மறைந்த முதல்வர் காம ராஜருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என தக்ஷிண மாரா நாடார் சங்கம் வலியறுத்தி உள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்னை கடற்கரையில் கலங் கரை விளக்கம் அருகே அமைந் துள்ள காமராஜர் சிலைக்கு அடுத்தபடியாக அவரது நினைவி டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி அண்மையில் காலமானார்.
அவ ரது உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய நீதி மன்றத்தை அணுகி அனுமதி பெற்றது திமுக தலைமை. இதையடுத்து காமராஜருக்கும் கடற்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 1975இல் காமராஜர் காலமானபோது அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதி மறுத்ததாக ஒருசாரார் குற்றம் சாட்ட, அதைத் திமுக தரப்பில் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காமராஜருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும், அங்கு அவரது சாதனை களை விவரிக்கும் வகையிலான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றும் தக்ஷிண மாரா நாடார் சங்கம் வலியுறுத்தி உள்ளது. "தற்போது காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள காமராஜரின் நினை விடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதில் பொதுமக்கள் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நகரின் மையத்தில் அமைந்துள்ள அந்த இடத்துக்குச் செல்ல முடி யாமல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் எமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். "எனவே கடற்கரையில் அவ ருக்கு நினைவிடம் அமைத்து, அங்கு கல்வி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் புரிந்துள்ள சாதனைகளைக் காட்சிப்படுத்த வேண்டும்," என தக்ஷிண மாரா நாடார் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.