இந்தியாவின் ஆகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

இந்தியாவின் ஆகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்' அடுத்த மாதம் 25ஆம் தேதி நடப்புக்கு வரவுள்ளது. வசதிகுறைந்த சுமார் 100 மில்லியன் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும். என்றும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இதற்கு இந்தியா சுமார் 120 பில்லியன் ரூபாயை ஆண்டுதோறும் காப்புறு திக் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியாவின் 72வது சுதந்திர தினமான நேற்று செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 80 நிமிடங்களுக்கு உரையாற்றியபோது இந்தத் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார். இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 'மோடிகேர்' என்று பரவலாக அறியப்படுகிறது. கிராமப்புறங்களைச் சேர்ந்த சுமார் 80 மில்லியன் குடும்பங்களும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த சுமார் 23.3 மில்லியன் குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்படுகிறது.

இதன்மூலம் 500 மில்லியன் மக்கள் பயனடைவர் என்று மக்கள்தொகை புள்ளிவிவரம் ஒன்று குறிப்பிடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 68 விழுக்காட்டினர் கிராமப் புறங்களில் வசிப்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் கிராமப் புறங்களில் உள்ளனர்.

செகந்திராபாத்தில் நேற்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் மோப்பநாய்களுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!