You are here

தனியார் வீடுகளின் விற்பனை உயர்ந்தது

தனியார் வீடுகளின் விற்பனை, கடந்தாண்டு ஜூலையுடன் ஒப்பு நோக்க இவ்வாண்டு ஜூலையில் 55% உயர்ந்தது-. கடந்த மாதம் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்த ஒரு நாளைக்கு முன்னர் பலர் வீடுகளை அவ சரமாக வாங்கியது இந்த உயர் வுக்குக் காரணம் எனக் கருதப் படுகிறது. சொத்து மேம்பாட்டாளர்கள் கடந்த மாதம் 1,724 தனியார் வீடுகளை விற்றனர். இந்த எண் ணிக்கை, ஜூன் மாதத்தில் விற் பனையான 654 வீடுகளைவிட 2.6 மடங்கு அதிகம். கடந்தாண்டு ஜூலையில் அந்த எண்ணிக்கை 1,112 ஆக இருந்தது.

நகர மறுசீரமைப்பு ஆணை யம், உரிமமுள்ள சொத்து மேம்பாட்டாளர்களைக் கொண்டு நடத்திய கருத்தாய்வின் அடிப் படையில் இந்தப் புள்ளி விவரங் களை நேற்று வெளியிட்டது.