You are here

அங்கன்வாடிகளில் ஆங்கில வழிக்கல்வி: அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அத்துறை யின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டு முதல் அங்கன்வாடி களில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டார். “தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இரண்டாயிரம் அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. அவற்றில் அடுத்த ஆண்டு முதல் மழலையர் வகுப்புகள் மற்றும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும். “பாலர் வகுப்புகளை முடித்த பிறகு அரசுப் பள்ளிகளில் ஆங் கில வழியில் கல்வி பயில இந்தக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

எனவே இதற்கேற்ப மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங் கப்படும். மூன்றாயிரம் சிறப்பு வகுப்புகளும் தொடங்கப்படும்,” என்றார் செங்கோட்டையன்.