மும்பை: அனைத்துலக அளவில் குழந்தைகளைக் கடத்தி விற் பனை செய்துவந்த குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை நேற்று போலிசார் கைது செய்த னர். இவன் குறைந்தது இந்தி யாவைச் சேர்ந்த 300 குழந்தை களைக் கடத்தி அமெரிக்க நாட்டில் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ராஜூ பாய் காம்லவாலா என்ற ராஜ்பாய், 2007ஆம் ஆண்டில் இந்தக் கடத்தல் வேலையை ஆரம்பித் துள்ளான். அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் இவன் ஒரு குழந்தைக்கு ரூ.45 லட்சம் வீதம் பெற்று குழந்தையை விற்றுள்ளான். கடத்தப்பட்ட குழந் தைகளின் நிலைமை என்ன என்று இன்னமும் தெரிய வர வில்லை. இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒரு சில உறுப்பினர்கள் மார்ச் மாதத்தில் கைதாகினர். பெரும்பாலும் குஜராத்தில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 முதல் 16 வயதுடைய சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர். அந்தக் குழந்தைகளைப் பராமரிப்ப தற்கு சிரமப்படும் பெற்றோரோ, பாதுகாவலர்களோ அந்தக் குழந் தைகளை விற்றுவிடுவர் என்று போலிஸ் அதிகாரி கூறினார்.
அமெரிக்காவில் இருந்து சிறார்கள் வேண்டும் என்று வேண்டுகோள் வந்ததும் காம்ல வாலா, 50, தனது கும்பலைச் சார்ந்த உறுப்பினர்களிடம் குஜ ராத்தில் உள்ள ஏழைக் குடும்பத் தைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் தங்கள் குழந்தைகளை விற்பனை செய்யத் தயாராக உள்ளனரா என்று தேடிப் பார்க்கச் சொல்வார். அத்துடன் கும்பலைச் சேர்ந் தவர்களும் குழந்தைகளின் பாஸ் போர்ட்டை வாடகைக்கு விடுபவர் களைத் தேடுவர். பாஸ்போர்ட்டில் உள்ள குழந்தைகளின் முகத் துடன் ஒத்துப்போகும் குழந்தை களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறி அமெரிக்காவுக்கு குழந்தை களைக் கடத்துவர். முன்னதாக, பாஸ்போர்ட் புகைப்படத்தில் இருப்பது போலவே பொருத்தமாகக் காட்டும் படியாக முக அலங்காரமும் குழந் தைக்கு செய்துவிடுவர்.